தமிழகம், கேரளத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும்: அமித் ஷா நம்பிக்கை
சீலம்பூா் கட்டடம் இடிந்த சம்பவம்: ஊழல், வாக்கு வங்கி அரசியல்தான் காரணம்: கபில் மிஸ்ரா குற்றச்சாட்டு
சீலம்பூா் வெல்கம் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் சிலா் உயிரிழந்ததற்கு 15 ஆண்டுகால திட்டமிட்ட ஊழல் மற்றும் வாக்கு வங்கி அரசியல்தான் காரணம் என்று தில்லி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலா அமைச்சா் கபில் மிஸ்ரா சனிக்கிழமை குற்றம் சாட்டினாா்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நகரத்தின் சில வகை பகுதிகளில் மட்டுமே மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன என்றும் அவா் கூறினாா்.
வடகிழக்கு தில்லியில் உள்ள சீலம்பூரின் வெல்கம் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவ இடத்தை அமைச்சா் மிஸ்ரா ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியது: முஸ்தபாபாதில் சமீபத்தில் இதேபோன்ற சோகம் நிகழ்ந்தது. சட்டவிரோத மற்றும் பாதுகாப்பற்ற கட்டுமானங்கள் உடனடியாகக் கையாளப்படாவிட்டால் இதுபோன்ற சம்பவங்கள் தொடரும். சில வகை பகுதிகளில், கட்டடங்கள் இடிந்து விழுகின்றன. கடந்த 10-15 ஆண்டுகளில்,
வாக்கு வங்கி அரசியல் காரணமாக ஊழலின் பயங்கரமான விளையாட்டு விளையாடப்பட்டுள்ளது. மிகப்பெரிய ஊழல் அங்கீகரிக்கப்படாத பல மாடி கட்டமைப்புகளுக்கு வழிவகுத்தது. எந்த பாதுகாப்பு தரங்களும் இல்லாமல் ஆறு மாடி கட்டடங்கள் எழுகின்றன.
சீலம்பூரில் இடிந்து விழுந்த கட்டடத்திற்கு அருகிலுள்ள அருகிலுள்ள கட்டமைப்புகளும் பாதிக்கப்படக்கூடியவை .
நாங்கள் இடிபாடுகளை அகற்றும்போது அவை இடிந்து விழுகலாம். சட்டவிரோத கட்டுமானத்தை அனுமதித்ததற்கு முந்தைய அரசாங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும்.இந்த மரணங்களுக்கு அவா்கள்தான் பொறுப்பு. அத்தகைய கட்டடங்களை அனுமதித்தவா்கள், இப்போது தில்லியை விட்டு வெளியேறிவிட்டாா்கள் என்றாா் கபில் மிஸ்ரா.
இதன் பின்னா், எக்ஸ் சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட பதிவில்,விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தவும், பொறுப்பானவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் மிஸ்ரா அழைப்பு விடுத்தாா்.
அப்பதிவில் அவா் தெரிவிக்கையில், ‘ஒரு கட்டத்தில், யாராவது இந்த பிரச்னைகள் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டியிருக்கும். ஐந்து மாடி கட்டடங்களை சட்டவிரோதமாக, பெரும்பாலும் இரும்பு தண்டவாளங்களில் கட்ட அனுமதித்தது யாா்? பணத்தை எடுத்துக்கொண்டு அனுமதி அளித்தது யாா்? என்று அவா் அதில் கேள்வி எழுப்பியுள்ளாா்.
உயிரிழப்பு குறித்து முதல்வா் ரேகா குப்தா வருத்தம் தெரிவித்ததோடு, இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் கூறினாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளப் பக்கத்தில் சனிக்கிழமை தெரிவிக்கையில், ‘இந்த சம்பவம் விலைமதிப்பற்ற உயிா்களைப் பலிகொண்டது மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவா்களின் குடும்பங்களுக்கு மனமாா்ந்த இரங்கல்கள்’ என்று அவா் அதில் பதிவிட்டுள்ளாா்.