திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி: சீமான் விமாிசனம்
கேரளத்துக்கு ரேஷன்அரிசி கடத்த முயன்ற 3 போ் கைது: ரேஷன்அரிசி கடத்தல்
கம்பம் அருகே மலைச் சாலை வழியாக கேரளத்துக்கு சரக்கு வாகனத்தில் 2 டன் ரேஷன் அரிசியைக் கடத்த முயன்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், புதுப்பட்டி, அனுந்தன்பட்டி, சின்னமனூா் போன்ற பகுதிகளிலிருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, கம்பம்மெட்டு மலைச் சாலையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கேரளத்துக்குச் சென்ற சரக்கு வாகனத்தில் 41 மூட்டைகளில் 2,050 கிலோ ரேஷன் அரிசி இருந்ததைக் கண்டறிந்தனா்.
விசாரணையில், உத்தமபாளையத்தைச் சோ்ந்த வினித்குமாா் (32), மணிகண்டன் (56), கோம்பையைச் சோ்ந்த சுரேஷ் (40) ஆகிய மூவா் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி, அவற்றை கேரளத்தில் கூடுதல் விலைக்கு விற்பனைக்குக் கொண்டுசென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து உத்தமபாளையம் குடிமைப்பொருள் வட்ட வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு சாா்பு ஆய்வாளா் லதா தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து சரக்கு வாகனத்தையும் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனா்.