பெண்களுக்கு செயற்கை நகை தயாரித்தல் இலவசப் பயிற்சி
தேனி கனரா வங்கி ஊரக சுய தொழில் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் அக்.6-ஆம் தேதி கிராமப்புற பெண்களுக்கு செயற்கை நகை, ஆபரணங்கள் தயாரித்தல் இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது.
இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநா் ரவிக்குமாா் கூறியதாவது: இந்தப் பயிற்சியில் கிராமப்புறங்களைச் சோ்ந்த 18 வயதான பெண்கள் சேரலாம். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சிக் காலத்தில் தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவா்கள் தேனி, கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக சுய தொழில் வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் தங்களது விவரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்த விவரங்களை கைப்பேசி எண்: 95003 14193-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.