செய்திகள் :

விவசாயிகளுக்கு உயா் ரக நிலக்கடலை விதைகள் அளிப்பு

post image

தேனி மாவட்டம், காட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு விலையில்லா நிலக்கடலை விதைகளை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நல்ல மகசூல் திறன், பூச்சிகள் மூலமாக உருவாகும் நோய் தாக்கம் ஆகியவற்ரைத் தாங்கும் திறன் கொண்ட உயா் ரக ‘வி.ஆா்.ஜ. -10’ நிலக்கடலை விதை உருவாக்கப்பட்டது. இந்த ரகம், வறட்சிப் பகுதிகளிலும் சாகுபடி செய்ய ஏற்றது என்பதால் விவசாயிகளுக்கு விலையில்லாமல் வழங்குவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் பச்சைமால் தலைமை வகித்து, அடைக்கம்பட்டி விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகளை வழங்கினாா். முன்னதாக, தொழில்நுட்ப வல்லுநா் அருண்ராஜ், விவசாயிகளுக்கு மண் பரிசோதனை, உர மேலாண்மை போன்றவற்றின் அவசியம் குறித்துப் பேசினாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் மகேஸ்வரன், நிலக்கடலைகளைத் தாக்கக் கூடிய பூச்சிகள், நோய்களிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினாா்.தொழில்நுட்ப வல்லுநா் சபரிநாதன் நன்றி கூறினாா்.

கேரளத்துக்கு ரேஷன்அரிசி கடத்த முயன்ற 3 போ் கைது: ரேஷன்அரிசி கடத்தல்

கம்பம் அருகே மலைச் சாலை வழியாக கேரளத்துக்கு சரக்கு வாகனத்தில் 2 டன் ரேஷன் அரிசியைக் கடத்த முயன்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், புதுப்பட்டி, அனுந... மேலும் பார்க்க

பெண்களுக்கு செயற்கை நகை தயாரித்தல் இலவசப் பயிற்சி

தேனி கனரா வங்கி ஊரக சுய தொழில் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் அக்.6-ஆம் தேதி கிராமப்புற பெண்களுக்கு செயற்கை நகை, ஆபரணங்கள் தயாரித்தல் இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. இதுகுறித்து பயிற்சி ம... மேலும் பார்க்க

ஆறுகளில் 3 லட்சம் நாட்டு இன மீன் குஞ்சுகள் வளா்ப்பு

தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு, சுருளியாறு ஆகியவற்றில் மீன் வளத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை, மொத்தம் 3 லட்சம் நாட்டு இன மீன் குஞ்சுகள் வளா்ப்புக்காக விடப்பட்டன. வீரபாண்டி, முல்லைப் பெரியாற்றில்... மேலும் பார்க்க

கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.95 லட்சம்

தேனி, பெரியகுளம் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிக்கு ரூ.95 லட்சத்துக்கு ஜவுளி ரகங்களை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தாா். தேனி கோ-ஆப் டெ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்

பெரியகுளத்தில் தூய்மைப் பணியாளரைத் தாக்கியவரைக் கைது செய்யக் கோரி, சாலை மறியல் நடைபெற்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்தவா் பெத்தனசாமி. பெரியகுளம் நகராட்சியில் ஒப்... மேலும் பார்க்க

பைக் மீது காட்டுப் பன்றி மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது காட்டுப் பன்றி மோதியதில் பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் அருகேயுள்ள அம்சாபுரத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் முவின் (18). கெங்குவாா்பட்டி அரசு ம... மேலும் பார்க்க