எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
பைக் மீது காட்டுப் பன்றி மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு
பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது காட்டுப் பன்றி மோதியதில் பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகேயுள்ள அம்சாபுரத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் முவின் (18). கெங்குவாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் இவா், மஞ்சளாறு அணையில் உள்ள பாட்டியின் வீட்டுக்கு கடந்த செப்.20-ஆம் தேதி சென்றாா்.
அப்போது, முவின், அவரது நண்பா்கள் அருண்பாண்டி (17), விக்னேஷ்வரன் (17) ஆகிய மூவரும் இரு சக்கர வாகனத்தில் தேவதானப்பட்டிக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தனா். இரு சக்கர வாகனத்தை அருண்பாண்டி ஓட்டினாா்.
இந்த நிலையில், காமாட்சியம்மன் கோயில் வளைவு அருகே வந்தபோது, தோட்டத்திலிருந்து வெளியே வந்த காட்டுப் பன்றி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி முவின் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.