தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு ...
கேரளம்: நிபா வைரஸ் அபாயத்தில் 499 பேர்! பட்டியல் வெளியீடு!
கேரளத்தில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேருடன் தொடர்பில் இருந்தோர் பட்டியலில் 499 பேர் இடம்பெற்றுள்ளதாக, அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளத்தின், மலப்புறம் மாவட்டத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 18 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் தற்போது அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 2 பேருடன் தொடர்பில் வந்தோரை அடையாளம் கண்டு பட்டியல் ஒன்றை கேரள சுகாதாரத் துறை தயாரித்துள்ளது.
அதில், 499 பேர் இடம்பெற்றுள்ள நிலையில், மலப்புறத்தில் 203 பேரும், கோழிக்கோடில் 178 பேர், பாலக்காடு மற்றும் எர்ணாக்குளம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மலப்புறத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் உள்பட 11 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், பாலக்காடு மாவட்டத்தில் 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இத்துடன், மாநிலத்தில் 29 பேர் அதிக ஆபத்து பட்டியலிலும், 117 ஆபத்து பட்டியலிலும் இருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், மலப்பறத்தில் புதிய தொற்று பாதிப்பும் உறுதி செய்யப்படாததால், மாவட்ட நிர்வாகம் அங்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை விலக்கியுள்ளது.
முன்னதாக, கேரளத்தில் நிபா பாதிப்புகள் கண்டறியப்பட்ட 2 வட மாவட்டங்களிலும், ஆய்வு மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறையின் தேசிய குழுவொன்று, ஜூன் 9 ஆம் தேதி அங்கு வருகைத் தந்தது குறிப்பிடத்தக்கது.
Kerala Health Minister Veena George has said that 499 people have been in contact with two people infected with the Nipah virus in Kerala.
இதையும் படிக்க: நடிகர் கபில் சர்மாவின் புதிய ஹோட்டலில் காலிஸ்தான் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு!