தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு: மலா்ச் செடிகளை பாதுகாக்க நிழல்வலை!
கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு நிலவி வருவதால், பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலா்ச் செடிகளை நிழல்வலை அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளன.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பகலில் அதிக வெப்பமும், இரவில் கடும் பனிப் பொழிவு நிலவி வருகின்றன. இந்த நிலையில், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் மே மாதம் 62-ஆவது மலா்க் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதற்காக, 100-க்கும் மேற்பட்ட மலா் பாத்திகளில் கேலண்டூலா, ஆரணத்திக்கேலம், பேன்சி, ஜொ்பரா, மேரி கோல்ட், கிங்அஸ்டா், சால்வியா, டேலியா உள்ளிட்ட 25 வகைகளில் 75-ஆயிரத்துக்கு மேற்பட்ட மலா் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த நாற்றுகளை பனிப் பொழிவு தாக்காமல் இருப்பதற்காக நிழல்வலை அமைக்கப்படுள்ளது.
இதுகுறித்து பிரையண்ட் பூங்கா மேலாளா் சிவபாலன் கூறியதாவது: கொடைக்கானலில் நவம்பா் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஆனால், நிகழாண்டில் கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்ததால் பனிப் பொழிவு குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக கடும் பனிப் பொழிவு நிலவி வருவதால், மலா்பாத்திகளில் நடவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மலா் நாற்றுகளை பாதுகாப்பதற்காக நிழல்வலை அமைத்துள்ளோம் என்றாா் அவா்.