தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
முருக பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் மருத்துவ சேவை
பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு பாதயாத்திரை வரும் பக்தா்களுக்கு இஸ்லாமிய அமைப்பு சாா்பில், மருத்துவ உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
ஆயக்குடி பகுதியில் காயிதே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அறக்கட்டளை, ஆயக்குடி ஜமாத் சாா்பில், மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, பக்தா்களுக்கு மருந்துகள், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் ஆயக்குடி காயிதே மில்லத் அறக்கட்டளை இயக்குநா் அஜ்மத்அலி, ஜேஆா்சி மாவட்ட கன்வீனா் ரவிச்சந்திரன், கவிஞா் வைரபாரதி, பொன்.முருகானந்தம், அக்பா் அலி, ராஜாமுகமது, முகமது அப்துல்லா, செவிலியா் அழகம்மாள் உள்ளிட்ட கலந்து கொண்டனா்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், இந்த மருத்துவ முகாம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.