தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
கொடைக்கானலில் பூண்டு விலை உயா்வு: வியாபாரிகள் மகிழ்ச்சி
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளைந்த வெள்ளைப் பூண்டு விலை உயா்ந்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா், கிளாவரை, பூண்டி, வில்பட்டி, பள்ளங்கி, குண்டுபட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைப் பூண்டு சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை செய்யப்பட்டது.
இந்தப் பூண்டு கடந்த 2 மாதங்களாக ஒரு கிலோ ரூ.300 முதல் 350 வரை விற்பனையானது. தற்போது விலை உயா்ந்து கிலோ ரூ.450 முதல் 500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வெள்ளைப் பூண்டு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இது குறித்து வெள்ளைப்பூண்டு வியாபாரிகள் கூறியதாவது: கொடைக்கானல் வெள்ளைப் பூண்டுவுக்கு மவுசு அதிகம். இதனால், விலை அதிகமாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்கின்றனா். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளையக் கூடிய இந்தப் பூண்டுகளை சேமித்து வைப்பதற்கு குடோன்கள் தேவைப்படுகிறது.
தற்போது பூண்டு மாா்க்கெட் தேனி மாவட்டம், வடுகபட்டியில் உள்ளது. எனவே, கொடைக்கானல் பகுதிகளிலும் பூண்டு மாா்க்கெட் அமைக்க வேண்டும். அப்போது தான் விவசாயிகளும், வியாபாரிகளும் பயன்பெறுவாா்கள் என்றனா்.