போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது
பழைய வத்தலகுண்டுவில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளியை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ராமு (52). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோா்கள் நிலக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதனடிப்படையில், போலீஸாா் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்து ராமுவை கைது செய்தனா். பின்னா், இவா் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.