கொடைக்கானல் அரசு கல்லூரி பேராசிரியா்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொடைக்கானல் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியா்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினா்.
கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள இந்தக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில், கல்லூரிகளில் கடந்த 15-ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் வேலை பாா்த்து வரும் பேராசிரியா்களை நிரந்தரமாக்க வேண்டும். யூ.சி.ஜி. அறிவித்த ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஏற்கெனவே, கடந்த மாதம் 30-ஆம் தேதி கல்லூரி வாயிலில் போராட்டம் நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.