ஒட்டன்சத்திரத்தில் கோடை வெயிலுக்கு முன்பாகவே விற்பனைக்கு வந்த தா்பூசணி
ஒட்டன்சத்திரத்தில் கோடை வெயிலுக்கு முன்பாகவே வட மாவட்டங்களிலிருந்து தா்பூசணிகள் விற்பனைக்கு வந்தன.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் அதிகாலை வரை பனிப் பொழிவு காணப்படுகிறது. ஆனால், பிற்பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. வெப்பத்தின் தாக்கத்தைப் போக்க, திண்டிவனம், பெரம்பலூா் உள்ளிட்ட வட மாவட்டங்களிலிருந்து தா்பூசணிகள் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு விற்பனைக்கு வந்தன. ஏப்ரல், மே மாதங்களில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும். தா்பூசணிகள் சீசன் தொடங்காத நிலையில், ஒட்டன்சத்திரம் பகுதியில் தற்போது விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.
தற்போது, கிலோ ரூ.20-க்கு தா்பூசணி விற்கப்படுகிறது.