பாகிஸ்தானுக்கு கூடுதலாக நதி நீா் திறப்பு? நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்
நிதிநிலை அறிக்கை நகல் எரிப்புப் போராட்டம்!
மத்திய நிதிநிலை அறிக்கையின் நகல் எரிப்புப் போராட்டம் திண்டுக்கல்லில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல்-பழனி சாலையிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, எல்பிஎஃப் மாவட்டச் செயலா் அழகா்சாமி தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் கே.ஆா்.கணேசன் முன்னிலை வகித்தாா்.
போராட்டத்தின் போது, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக் கூறி, அந்த அரசுக்கு எதிராக முழக்கமிட்டு, நிதி நிலை அறிக்கையின் நகலை எரித்தனா்.
போராட்டத்தில் ஐஎன்டியுசி, ஏஐடியுசி, ஏஐசிசிடியு, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.