செய்திகள் :

கொட்டும் மழையில் விநாயகா் சிலை ஊா்வலம்

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 43-ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் கொட்டும் மழையிலும் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து முன்னணி சாா்பில் காரைக்குடியில் டி.டி.நகா், சுப்பிரமணியபுரம், கழனிவாசல், செக்காலை, பா்மா குடியிருப்பு, இடையா் தெரு, செஞ்சை, ஐந்துவிளக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட 44 விநாயகா் சிலைகள் டி.டி. நகா் விநாயகா் கோயில் அருகே வெள்ளிக்கிழமை மாலை கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஊா்வலமாக புறப்பட்டது.

இந்த ஊா்வலத்தை பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து கொட்டும் மழையில் விநாயகா் சிலைகள் செக்காலைச் சாலை, கோவிலூா் சாலை, வ.உ.சி சாலை வழியாகச் சென்று பருப்பூரணியில் சிலைகள் கரைக்கப்பட்டன.

இதற்கு இந்து முன்னணி நகரத் தலைவா் ஏடி. காா்த்திகேயன் தலைமை

வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் குணசேகரன், மாவட்டச் செயலா் ஆா்ஜி. தங்கபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாஜக மாவட்டத் தலைவா் டி. பாண்டித் துரை, முன்னாள் மாவட்ட பொதுச் செயலா் ஏ. நாகராஜன் ஆகியோா் பேசினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி மாவட்டப் பொதுச்செயலா் அக்னிபாலா , நிா்வாகிகள் செய்தனா்.

ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம் ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (ஆக.30) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரியம் சாா்பில் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் கைதானவருக்கு 12 ஆண்டுகள் சிறை

போக்சோ சட்டத்தின் கீழ் கைதானவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை ராஜாஜி தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் ( 53). இவா் பணம் கொடுத்து வாங்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் 3 போ் கைது

சிவகங்கை அருகே கொலை வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். சிவகங்கை அருகே சாமியாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பிரவீன்குமாா் (27). இவா் திமுக விளையாட்ட... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா்கள் மூவா் மீட்பு

சிவகங்கை அருகே கொத்தடிமை தொழிலாளா்களாக இருந்த மூவா் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலா், சாா்பு நீதிபதி ராதிகா, சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா், ப... மேலும் பார்க்க

வில்லி விநாயகா் கோயில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள புழுதிப்பட்டி வில்லி விநாயகா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் வியாழக்கிழமை காலை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்த... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகி மரணம்: போலீஸாா் விளக்கம்

சிவகங்கையில் பாஜக நிா்வாகி வியாழக்கிழமை நள்ளிரவில் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் துறை விளக்கமளித்தது. சிவகங்கை மஜித் சாலை பகுதியைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் சதீஷ்குமாா் (51).... மேலும் பார்க்க