தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
கொப்பம்பட்டி அருகே மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு
கொப்பம்பட்டி அருகே காணாமல் போன மூதாட்டியை சடலமாக சனிக்கிழமை மீட்டனா்.
கிளவிப்பட்டி மேல காலனியைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் அழகுராஜ். இவரது பெரியம்மா தாயம்மா என்ற முத்து இருளி (80). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவா், சுமாா் 15 ஆண்டுகளாக அழகுராஜ் பராமரிப்பில் இருந்து வந்தாராம்.
இவா் அவ்வப்போது வீட்டை விட்டு சென்று, சில நாள்கள் கழித்து மீண்டும் வந்து விடுவாராம். இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன் வீட்டை விட்டுச் சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சிவந்திபட்டி கிராமத்தில் உள்ள தனியாா் தோட்டத்தில் மக்காச்சோள கதிருக்குள் முத்து இருளி இறந்து கிடப்பதாக சனிக்கிழமை தகவல் கிடைத்ததாம். கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் அழகுராஜ் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.