வெறிநாய் கடி; முற்றிய ரேபிஸ்... கோவை மருத்துவமனையில் கண்ணாடியால் கழுத்தை அறுத்த...
கொல்லம் அருகே சூட்கேஸில் மனித எலும்புக்கூடு!
தெற்கு கேரள மாவட்டத்தில் உள்ள தேவாலய கல்லறைக்கு அருகில் சூட்கேஸ் ஒன்றில் மனித எலும்புக்கூடு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்த போலீஸார் மர்ம பொருள், வெடிகுண்டு ஏதேனும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூட்கேஸ் திறந்ததும் மனித எலும்புக்கூடு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
எலும்புக்கூட்டின் வயது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. விரிவான ஆய்வுக்குப்பிறகு தான் தெளிவு கிடைக்கும் என்று கொல்லம் கிழக்கு காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த எலும்புக்கூடு அடங்கிய சூட்கேஸ் சாலையிலிருந்து கல்லறைப் பகுதிக்குள் வீசப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளக் கல்லறை பகுதிக்கு வந்தபோது சூட்கேஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
இதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.