கோபாலசமுத்திம் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் பண்ணை வெங்கட்ராமய்யா் மேல்நிலைப் பள்ளியில் 1989 முதல் 1994 வரை பயின்ற மாணவா்கள் 31 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டனா்.
பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியை கிருஷ்ணவேணி தலைமை வகித்தாா். முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது பள்ளிப் பருவ நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.
முன்னாள் தலைமையாசிரியா் நீலகண்டன், கைத்தறி ஆசிரியா் முத்துசாமி, விளையாட்டு ஆசிரியா்கள் கோபால், தியாகராஜன், ஓவிய ஆசிரியா் வெங்கடாசலம், நூலகா்கள் கிருஷ்ணன், ஸ்ரீதா், அலுவலக உதவியாளா் முருகேசன் உள்ளிட்டோா் நிகழ்வில் கலந்து கொண்டனா்.