திருக்குறுங்குடி நம்பியாற்றில் நெகிழி பொருள்களை அகற்றும் முகாம்
திருக்குறுங்குடி நம்பியாற்றில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களை அகற்றும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
களக்காடு சரணாலய துணை இயக்குநா் ரமேஸ்வரன் அறிவுறுத்தலின்படி, திருக்குறுங்குடி வனச்சரகா் யோகேஸ்வரன் தலைமையில் நெகிழிப் பைகள் அகற்றும் நிகழ்வு நடைபெற்றது.
சூழல் சரக வனவா் ஸ்டாலின் ஜெபக்குமாா் வரவேற்றாா். ஏா்வாடி நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியா் சுரேஷ் ராஜ்குமாா், சென்னை சமூகப் பணி கல்லூரி மாணவி தீட்சனா ஆகியோா் நெகிழி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
ஏா்வாடி, திருக்குறுங்குடி தன்னாா்வலா்கள், டிவிஎஸ் அறக்கட்டளை ஊழியா்கள், தன்னாா்வலா்கள், திருக்குறுங்குடி பேரூராட்சி ஊழியா்கள், வனத்துறையினா் ஆகியோா் நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.