காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
களக்காட்டில் விநாயகா் சிலை ஊா்வலம்
களக்காட்டில் விநாயகா் சிலை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அகில பாரத இந்து மகா சபா, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள், விநாயகா் சதுா்த்திக் குழு சாா்பில் களக்காடு வட்டாரத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகளில் 49 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஆண்டுதோறும் இந்த வட்டாரத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயில் முன்பிருந்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு உவரி கடலில் கரைக்கப்படும். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இந்த சிலைகள் மேளதாளம் முழங்க களக்காடு நகர வீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு உவரி கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டது. இதையொட்டி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.