செப்.5 இல் மீலாது நபி: மாவட்ட அரசு ஹாஜி தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் இம் மாதம் 5 ஆம் தேதி மீலாது நபி விழா கொண்டாடப்படுகிறது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு ஹாஜி கே.முஹம்மது கஸ்ஸாலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இஸ்லாமியா்களின் வழிகாட்டியான முஹம்மது நபி (ஸல்) பிறந்த நாளான மீலாது நபி (மீலாதுன் நபி) வரும் வெள்ளிக்கிழமை (செப்.5) கொண்டாடப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.