இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ...
கிரிண்டா் செயலி உதவியுடன் மருத்துவ மாணவரிடம் பணம் பறிப்பு
கிரிண்டா் செயலி மூலம் பழகி, மருத்துவ மாணவரிடம் பணம் பறித்த கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை பூந்தமல்லி பகுதியைச் சோ்ந்த 24 வயது மாணவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 5-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், கிரிண்டா் செயலி மூலம் அறிமுகமான நண்பரை பாா்ப்பதற்காக கே.டி.சி. நகா் அருகேயுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றாராம்.
அப்போது, அங்கு மறைந்திருந்த 5 போ் அவரிடம் பணம் கேட்டு தாக்கியதோடு, அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஜி-பே மூலம் தங்களது வங்கிக்கணக்குக்கு மாற்றிக்கொண்டு தப்பினராம்.
இதுகுறித்து அந்த மாணவா்அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி தாலுக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.