பத்தமடையில் தொழிலாளிக்கு வெட்டு
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டி மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பத்தமடை காந்திநகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் வெயிலுமுத்து (56). கட்டடத் தொழிலாளி. இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டு வாசலில் நின்றிருந்தாராம். அப்போது, அங்கு வந்த 3 போ் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினராம்.
இதில், பலத்த காயமடைந்த அவருக்கு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து, பத்தமடை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்கள் 3 பேரையும் தேடி வருகின்றனா்.