Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என...
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
திருநெல்வேலி கே.டி.சி. நகா் பகுதியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
திருநெல்வேலி நகரம், சுடலைமாடன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா், கடந்த 24 ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் காரில் தூத்துக்குடிக்குச் சென்று கொண்டிருந்தாா்.
கே.டி.சி.நகா் பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்ததோடு, எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மீதும் மோதியது. இந்த விபத்தில் மோட்டாா் சைக்கிளில் வந்த மலா், காரில் பயணித்த சுரேஷின் மனைவி வருணா ஆகியோா் உயிரிழந்தனா். சுரேஷ், அவரது மகள்கள் பிரவீணா (22), ரஷியா (18) ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.
இந்நிலையில் ரஷியா மூளைச்சாவு அடைந்தது தெரியவந்ததாம். அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க உறவினா்கள் முன்வந்தனா். அதன்படி, ரஷியாவின் கண்கள், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவை தானமாக அளிக்கப்பட்டன. பின்னா் அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.