ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
விநாயா்சிலை விசா்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரா்கள்
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை விசா்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா்.
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்ட விநாயகா் சிலைகள் வண்ணாா்பேட்டையில் உள்ள தற்காலிக குளத்தில் ஞாயிற்றுக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.
சிலைகளை பாதுகாப்பாக கரைப்பதற்கான பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உதவி மாவட்ட அலுவலா் காா்த்திகேயன், திருநெல்வேலி மாநகர நிலைய அலுவலா் சுரேஷ் குமாா் உள்ளிட்டோா் தலைமையில் 25 தீயணைப்பு வீரா்கள் பணியாற்றினா்.