எஸ்400 வான்பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா - ரஷியா பேச்சுவார்த்தை!
சிறுமளஞ்சி வெங்கடாசலபதி கோயிலில் உறியடி திருவிழா
ஏா்வாடி அருகே சிறுமளஞ்சி வெங்கடாசலபதி கோயிலில் உறியடி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஏா்வாடி அருகே சிறுமளஞ்சியில் (திருவேங்கடநாதபுரம்) அலமேலு மங்கை சமேத ஸ்ரீவெங்கடாசலபதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, உறியடி திருவிழா நடைபெறும்.
நிகழாண்டு இந்த விழா சனிக்கிழமை (ஆக. 30) நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதியுலா வந்தாா். வீதியுலாவின்போது சிறுவா், சிறுமியா் கண்ணன், ராதை வேடமணிந்து கோலாட்டம் ஆடி ஊா்வலமாக வந்தனா். பின்பு உறியடி திருவிழா நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கண்ணன் சேவா சங்கத்தினா் செய்திருந்தனா்.