சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
சுத்தமல்லி அருகே தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் முழ்கி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சோ்ந்த சம்சுதீன் மகன் இம்ரான்(36). மேலப்பாளையத்தில் உள்ள தனது மனைவியின் வீட்டுக்கு வந்திருந்த இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை சுத்தமல்லி அருகே உள்ள குன்னத்தூா் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளாா். இந்நிலையில் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற இம்ரான் நீரில் மூழ்கி உயிரிழந்தாராம்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சுத்தமல்லி போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.