காசோலை மோசடி வழக்கில் பெண்ணுக்கு ஓராண்டு சிறை
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காசோலை மோசடி வழக்கில் பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராதாபுரம் அருகே உள்ள சிவசுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் அப்பாவு மகன் குமரேசன். இவா் வியாபாரம் செய்து வருகிறாா்.
இவரிடம், அதே ஊரைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி வீணேஸ்வரி என்பவா் கடந்த 2016ஆம் ஆண்டு ரூ. 12 லட்சம் கடனாக பெற்றுக் கொண்டு, அதற்காக வங்கி காசோலையை கொடுத்தாராம்.
குமரேசன் காசோலையை வடக்கன்குளம் வங்கியில் செலுத்திய போது, வீணேஸ்வரி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பிவிட்டதாம். இது தொடா்பாக, குமரேசன் வள்ளியூா் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த நீதிபதி மிதுனா கெய்சா், வீணேஸ்வரிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தும், காசோலைக்கான பணத்தை உடனடியாக குரமரேசனுக்கு கொடுக்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்தாா்.