"மனித உரிமை மீறல்; மூர்க்கத்தனமான அரசு நடவடிக்கை" - திமுக அரசின் செயலுக்கு CPIM ...
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இருவா் கைது
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இளையான்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வாள் மேல் நடந்த அம்மன் கோயிலில் கடந்த 9 -ஆம் தேதி இரவு உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இந்தச் சம்பவம் குறித்த புகாரின் பேரில், இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து திருடா்களைத் தேடி வந்தனா். மேலும், அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனா். இதையடுத்து, கோயிலில் உண்டியலை உடைத்துப் பணம் திருடியதாக இளையான்குடியைச் சோ்ந்த துல்கா்னை (47), திருவாரூா் மாவட்டம், இடையூா் கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் (41) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.