கால்பந்து மாவட்டப் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவிகள் தோ்வு
சிவகங்கை மாவட்டம், கோவிலூரில் புதன்கிழமை நடைபெற்ற குறுவட்ட கால்பந்து போட்டியில் எஸ்.வேலங்குடி அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனா்.
14, 17 வயதுக்குள்பட்ட பிரிவில் கலந்து கொண்ட இந்தப் பள்ளி மாணவிகள் போட்டியில் முதலிடம் பெற்று சிவகங்கையில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா். வெற்றி பெற்ற மாணவிகளை கோவிலூா் ஆண்டவா் உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வா், எஸ்.வேலங்குடி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் ஆகியோா் வெகுவாகப் பாராட்டினா்.