மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை முயற்சி
சிவகங்கை அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்ய முயன்றாா். கை துண்டான நிலையில் அவா் மீட்கப்பட்டு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள மேட்டுப்பட்டியைச் சோ்ந்த அருள்புஷ்பத்தின் மகன் டேவிட் ஜான் பால்(33). இவா் ராமேசுவரத்திலிருந்து தாம்பரத்துக்குச் செல்லும் பயணிகள் ரயில் சிவகங்கை ரயில் நிலையத்துக்கு மாலை 6.30 மணிக்கு வந்தபோது,
அந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றாா். இதைப் பாா்த்த ஓட்டுநா் ரயிலை உடனடியாக நிறுத்தினாா். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து ரயிலின் அடியில் சிக்கி இருந்த டேவிட் ஜான் பாலை மீட்டனா். வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில், அவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவத்தால் பயணிகள் ரயில் சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.