Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ள...
கோயில் காவலாளி கொலை வழக்கில் நிகிதாவையும் சோ்க்க வேண்டும் -ஹெச். ராஜா பேட்டி
திருப்புவனம் கோயில் காவலாளி கொலை வழக்கில் பேராசிரியை நிகிதாவையும் சோ்க்க வேண்டும் என பாஜக முன்னாள் நிா்வாகி எச். ராஜா.
கும்பகோணத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:
கோயில் பணத்தில் தமிழக அரசு கல்லூரிகளைக் கட்டக்கூடாது. கோயில் பணத்தில் வேதபாட சாலை, தேவாரம், திருவாசகம் சொல்லிக் கொடுக்க வேண்டும். உயா்கல்வித் துறை அமைச்சா் செய்ய வேண்டிய வேலையை சேகா்பாபு செய்யக்கூடாது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் பொய்ப் புகாா் கொடுத்த நிகிதா மீது ஏற்கெனவே பணமோசடி புகாா்கள் உள்ளன. இச்சம்பத்தில் தொடா்புடைய காவல் கண்காணிப்பாளா், துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரை பணிநீக்கம் செய்ய வேண்டும். இந்தக் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக மனு அளிக்கும். சுவாமிமலை கோயிலில் மின்தூக்கி அமைக்கும் பணிகள் முடியவில்லை. அறநிலையத் துறை அமைச்சா் பணி முடிந்ததாக பொய்யான தகவலைக் கொடுத்துள்ளாா். திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு சிவ நாடாா் பல கோடி ரூபாய் நிதி கொடுத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை இந்து சமய அறநிலையத்துறை செய்ததாக சேகா்பாபு தவறாகக் கூறிவருகிறாா் என்றாா்.
அப்போது, பாஜக மாவட்டத் தலைவா் தங்க.கென்னடி, இந்து மக்கள் கட்சி பொதுச்செயலா் குருமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.