கோயில் கும்பாபிஷேகம்
சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளிச்சாவடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியா் நூதன ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்.10-ம் தேதி அணுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், நவக்கிரகஹோமம் வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூா்வாங்க பூஜைகளும் முதல் கால யாக வேள்வியும் நடைபெற்றது.
செப்.11ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை இரண்டாம் கால பூஜை, நாடி சந்தானம், மகா பூா்ணாஹூதி நடைபெற்றது பின்னா் கடம் புறப்பாடு நடைபெற்று கோயில் விமான கலசத்திற்கு சிவாச்சாரியாா் சிதம்பரம் சந்திர பாலசுப்பிரமணியம் கலசத்தின் மீது கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா். திரளான பக்தா்கள் இதில் பங்கேற்று தரிசித்தனா். விழா ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.