ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது: குடியரசுத் தலை...
கோயில் பூட்டை உடைத்து திருட்டு
புன்செய்புளியம்பட்டி அருகே கோயில் பூட்டை உடைத்து பாத்திரங்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள புங்கம்பள்ளியில் கரிய காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பூட்டை உடைத்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புகுந்த மா்ம நபா்கள், கோயிலில் இருந்த பாத்திரங்களைத் திருடிச் சென்றனா்.
துணை சுகாதார நிலையத்தில் திருட முயற்சி: புன்செய்புளியம்பட்டியை அடுத்த நல்லூா் துணை சுகாதார நிலையத்தின் பூட்டை உடைத்து ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த மா்ம நபா்கள் திருட முயன்றுள்ளனா். அங்கு மாத்திரை, மருந்துகள் மட்டுமே இருந்ததால் எந்தப் பொருளையும் எடுக்காமல் திரும்பிச் சென்றுள்ளனா்.
இச்சம்பவங்கள் குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.