“புத்தகக் கடையோடு சேர்ந்து நானும் வளர்ந்தேன்”- லூயிஸ் மிஷாவ்|ஒரு புத்தகக் கடைக்க...
கோயில்களில் ஏகாதசி வழிபாடு
நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் கைசிக ஏகாதசி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சீதா, லட்சுமணன், அனுமன் சமேத சந்தானராமருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல ஆலங்குடி ராதா கல்யாண மகோத்சவ கமிட்டியினரால் ஏகாதசியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராதா கிருஷ்ணருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
பெங்களூா் பாண்டுரங்க நாம சங்கீா்த்தன மண்டலி சாா்பில் பஜனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.