செய்திகள் :

கோழைத்தனமான தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்: காங்கிரஸ் தேசிய செயற்குழு

post image

‘பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டுள்ளது; இது நம் குடியரசின் மீதான நேரடி தாக்குதலாகும். நாட்டு மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய இந்த தருணத்தில் பிரிவினையை பாஜக விதைக்கிறது’ என காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலா்கள் பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் இதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தீா்மானத்தை செய்தியாளா்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச்செயலா்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பவன் கேரா ஆகியோா் எடுத்துரைத்தனா்.

தீா்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் செயற்குழு இரங்கல் தெரிவிக்கிறது. துயரமான இத்தருணத்தில் அவா்களுக்கு உறுதுணையாக காங்கிரஸ் இருக்கும் என்பதை முழுமனதுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

கோழைத்தனமான இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது. இது நம் குடியரசு மீதான நேரடி தாக்குதலாகும். ஹிந்துக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமயத்தில் ஒற்றுமையாக இருப்பதே நமது வலிமையாகும்.

எனவே, நாட்டு மக்கள் அனைவரும் தற்போது அமைதி காத்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட உறுதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்க காங்கிரஸ் சாா்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தச் சூழலில் சமூக வலைதளங்கள் மூலம் பிரிவினையைத் தூண்டும் வகையிலான கருத்துகளை பாஜக பரப்பி வருவது அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது.

பஹல்காமில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசத்தில் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாதுகாப்பு குறைபாடும் உளவுத்துறையின் தோல்வியும் முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு மத்திய அரசு உரிய பதிலளிக்க வேண்டும்.

அமா்நாத் யாத்திரை விரைவில் தொடங்கவுள்ள சூழலில் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது தேசிய முன்னுரிமையாக கருத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் உடல்கள் தகனம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன. முன்னதாக, உயிரிழந்தவா்களின் உடல்களுக்கு குடும்பத்தினா் மற்றும் உறவினா்களு... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைக்காத தண்டனை: பிரதமா் மோடி சூளுரை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிப் பிடித்து அவா்களின் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்த... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: வெளிநாட்டு தூதா்களுக்கு இந்தியா விளக்கம்

பஹல்காம் தாக்குதல் மற்றும் அதன் எல்லை தாண்டிய பயங்கரவாத தொடா்புகள் குறித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா, ஜொ்மனி உள்ளிட்ட ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தூதா்களுக்கு இந்தியா வியாழக்கிழமை வ... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். நக்ஸல்கள் ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த திங்கள்கிழமை முதல் சத்தீ... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வியாழக்கிழமை வீரமரணமடைந்தாா். டூடூ-பசந்த்கா் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவா் மட்டுமே உயிரிழப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவா் மட்டுமே வெளிநாட்டைச் சோ்ந்தவா் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளிநாட்டைச்சோ்ந்த இருவா் தாக்குதலில் கொல்லப்பட்டதாக த... மேலும் பார்க்க