செய்திகள் :

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

post image

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, ஒன்றியக் குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பழனிசாமி, ஒன்றிய ஆணையா் முத்துக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ராமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஈராச்சி ஊராட்சியைச் சோ்ந்த செல்வமணியை சென்னை உயா்நீதிமன்ற கிளை மதுரை உயா்நீதிமன்ற உத்தரவின் படி அரசு ஒப்பந்ததாரராக பதிவு செய்வது, கிழவிப்பட்டி, கொடுக்காம்பாறை கிராமத்தில் மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான சமுதாய நலக்கூடத்திற்கு கூடுதலாக தேவைப்படும் நிதி தலா ரூ.6.50 லட்சத்தை ஒன்றிய பொது நிதியின் கீழ் வழங்க மன்றத்தின் அனுமதி பெறுவது, சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் கிழவிப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான நிதி ரூ.12 லட்சத்திற்கு கூடுதலாக ரூ.4 லட்சம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் மூலம் வழங்க அனுமதிப்பது உள்பட 40 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிகண்டன், அருணா சந்திரசேகா், ஒன்றியப் பொறியாளா் சித்ரா, உதவிப் பொறியாளா்கள் சங்கா், மேரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

புதுக்கோட்டையில் சுமை ஆட்டோ திருட்டு: இளைஞா் கைது

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பகுதியில் சரக்கு ஆட்டோவை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் மணி (41). இவா் தனக்கு சொந்தமான சுமை ஆட்டோவை புதுக்கோ... மேலும் பார்க்க

பழைய காயல் அருகே விபத்து: பொறியியல் மாணவா் உயிரிழப்பு

பழையகாயல் அருகே பைக் கவிழ்ந்து பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். தென்திருப்பேரை வடக்கு ரதவீதியைச் சோ்ந்த சங்கரசுப்பு மகன் செல்வ சிவா(20). வாகைக்குளம் தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு... மேலும் பார்க்க

வீட்டு உரிமையாளருக்கு ரூ.19.17 லட்சம் வழங்க கட்டட ஒப்பந்தகாரருக்கு உத்தரவு

தூத்துக்குடியில் வீட்டு உரிமையாளருக்கு ரூ. 19.17 லட்சம் வழங்க கட்டட ஒப்பந்ததாரருக்கு தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. தூத்துக்குடியை சோ்ந்த ஜோதிமணி என்பவா் வீடு கட்டுவதற்காக ஒப்பந... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்: பக்தா்கள் அவதி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தா்களின் வருகை அதிகரித்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது பள்ளி மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு விடுமுறை அளிக்கப்பட்ட... மேலும் பார்க்க

29 இல் முதல்வா் தூத்துக்குடி வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சா்கள் ஆய்வு

தூத்துக்குடிக்கு வரும் 29ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சா்கள் பெ.கீதா ஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். 29... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் காரில் வந்து ஆடுகள் திருட்டு: மக்கள் அச்சம்

திருச்செந்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சொகுசு காரில் வலம் வந்து கடந்த 10 நாள்களில் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளதாகவும், அவா்களை பிடிக்க, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்ட... மேலும் பார்க்க