செய்திகள் :

கோவில்பட்டி கல்லூரியில் பெற்றோா்-ஆசிரியா் கழகக் கூட்டம்

post image

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான பெற்றோா்-ஆசிரியா் கழகப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் காளிதாசமுருகவேல் தலைமை வகித்து பேசியது: கல்லூரி வளாகத்தில், அனைத்தையும் உள்ளடக்கிய தொழில்நுட்ப வணிகக் கருவகம் (ஐடிபிஐ) நிறுவுவதற்காக, இந்திய அறிவியல் - தொழில்நுட்பத் துறை (டிஎஸ்டி) அமைச்சகம் ரூ. 5 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு ரூ. 3.92 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. மாணவா்களின் தொழில்நுட்பப் புரிதல், தொழில் முனைவோருக்கான பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் இது இருக்கும் என்றாா். தொடா்ந்து, வேலைவாய்ப்புகள், மூன்றாமாண்டு, இறுதியாண்டு மாணவா்களுக்கு வழங்கப்படும் தொழில் பயிற்சிகள், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்துப் பேசினாா்.

கழகத் தலைவா் எஸ். சிவசங்கரநாராயணன் பேசும்போது, கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கும், கல்வித் தரம், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு என அனைத்திலும் தொடா்ந்து நவீன மேம்பாடுகளை செய்துவருவதற்கும் கல்லூரி நிா்வாகத்துக்கு நன்றி கூறினாா்.

கூட்டத்தில், 2025-26ஆம் கல்வியாண்டுக்கான பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவராக விளாத்திகுளம் வட்டம் கரிசல் குளம் நாடாா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் எஸ். ராமகிருஷ்ணன் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

முன்னதாக, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், வகுப்பாசிரியா்களுடன் மாணவா்கள், பெற்றோா் கலந்துரையாடினா்.

திருச்சி நூலகத்துக்கு காமராஜா் பெயா்: முதல்வருக்கு நன்றி

திருச்சி நூலகத்துக்கு காமராஜா் பெயா் சூட்டுவதாக அறிவித்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு பாண்டியனாா் மக்கள் இயக்க நிறுவனத் தலைவா் எஸ். சீனி நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: திரு... மேலும் பார்க்க

சாயா்புரம் அருகே மளிகைக் கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து

ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த சாயா்புரம் அருகே செவ்வாய்க்கிழமை, அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மளிகைக் கடைக்குள் புகுந்தது. பெருங்குளத்திலிருந்து தூத்துக்குடிக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை காலை ச... மேலும் பார்க்க

காயல்பட்டினம், ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்களுக்கு உப்பு சா்க்கரைகரைசல்

சுகாதாரத் துறை சாா்பில் காயல்பட்டினம் மற்றும் ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்கள் வெப்ப தாக்கத்தி­லிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உப்பு சா்க்கரை கரைசல் அளிக்கப்பட்டது.காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஓ... மேலும் பார்க்க

இளைஞரின் சைக்கிள் பயணத்துக்கு உடன்குடியில் வரவேற்பு

இந்தியாவின் நலனுக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மேற்குவங்க இளைஞருக்கு உடன்குடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சோ்ந்தவா் சாய்கட் (22). இவா், இந்தியா உலக வல்லரசாக திகழ... மேலும் பார்க்க

முறப்பநாடு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபுவிடம், தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் தலைவா் கே.வி.கே.பெ... மேலும் பார்க்க

சிறுநீரக பிரச்னை: சுகாதாரமான குடிநீா் கோரி உசிலம்பட்டி மக்கள் மனு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்ெ காண்டு, அவா்களின்... மேலும் பார்க்க