காந்தியடிகள்கூட இப்படி போராடமாட்டார்! அண்ணாமலைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை!!...
கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் வேளாண் டிராக்டா், ஆட்டோக்களுக்கு கட்டண விலக்கு
நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் உள்ள சுங்கச் சாவடியில் விவசாயப் பொருள்களை ஏற்றிவரும் டிராக்டா்கள் மற்றும் ஆட்டோ, இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை- திருவாரூா் இடையே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இந்திய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் கோவில்வெண்ணியில் சுங்கச்சாவடி திறக்கப்பட்டுள்ளது. இதன் வழியே செல்லும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, காா், ஜீப், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனம் ஒருமுறை பயணிக்க ரூ. 75; 24 மணி நேரத்திற்குள் திருப்ப பயணிக்க ரூ.110. மாதந்திர கட்டணம் ரூ. 2,445. இலகுரக வணிக வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளுக்கு ஒருமுறை பயணிக்க ரூ. 120; 24 மணி நேரத்துக்குள் திரும்ப பயணிக்க ரூ. 180. மாதாந்திர கட்டணம் ரூ.3,955.
பேருந்து, ட்ரக் ஒருமுறை பயணிக்க ரூ. 250; 24மணி நேரத்துக்குள் திரும்ப பயணிக்க ரூ. 375. மாதாந்திர கட்டணம் ரூ. 8,280. மூன்று அச்சுகள் கொண்ட வணிக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ. 270; 24 மணி நேரத்துக்குள் திரும்ப பயணிக்க ரூ.405. மாதந்திர கட்டணம் ரூ.9,035.
பல அச்சுகள் கொண்ட கட்டுமான எந்திரங்கள், மண் ஏற்றிச் செல்லும் வாகனம் (3 முதல் 6 அச்சுக்கள் ) ஒருமுறை பயணிக்க ரூ.390; 24 மணி நேரத்துக்குள் திரும்ப பயணிக்க ரூ.585. மாதாந்திர கட்டணம் ரூ. 12,985.
அதிக அளவு அச்சுகள் கொண்ட வாகனம் (7 மற்றும் அதற்கு மேல் அச்சுகள்) ஒருமுறை பயணிக்க ரூ. 475; 24 மணி நேரத்துக்குள் திரும்ப பயணிக்க ரூ. 710. மாதந்திர கட்டணம் ரூ.15,810 ஆகும்.
உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணத்தில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச் சாவடியில் இருந்து 20 கி.மீ. தூரத்துக்குள் உள்ள வணிக நோக்கம் இல்லாத வாகனங்களுக்கு மாதாந்திர சலுகை கட்டணம் ரூ. 340 (50 முறை சென்றுவர) வசூல் செய்யப்படும். இதற்கான உரிய ஆவணங்கள் அதாவது ஆதாா், ஆா்சி, வாகனப் பதிவு போன்றவை ஒரே முகவரியில் இருக்க வேண்டும்.
நெல், வைக்கோல் போன்ற வேளாண் பொருள்களை ஏற்றிச் செல்லும் டிராக்டா்கள் மற்றும் மூன்று சக்கர வாகனம் ஆட்டோ, இருசக்கர வாகனங்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் குறிப்பாக ‘டி’ போா்டு வாகனங்கள் கட்டண சலுகை பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
,