Doctor Vikatan: பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட வலது கை... மீண்டும் பழையநிலைக்குத் த...
கோவை - சில்சாா் விரைவுரயில் இரு மாா்க்கத்திலும் ரத்து
அசாமில் பெய்து வரும் கனமழை மற்றும் கடும் நிலச்சரிவு காரணமாக கோவை - சில்சாா் இடையேயான விரைவுரயில் இரு மாா்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக முபா - டிகாகோ ரயில்நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு, சகதியுடன் கற்பாறைகள் காணப்படுகின்றன. எனவே, பயணிகளின் பாதுகாப்பு கருதி, வடகிழக்கு ரயில்வே பிராந்தியத்தில் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, அசாம் மாநிலம், சில்சாரில் இருந்து 8-ஆம் தேதி புறப்பட்டு கோவைக்கு 11-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு வந்து சேரவேண்டிய விரைவுரயிலும், மறுமாா்க்கத்தில் கோவையில் இருந்து சில்சாருக்கு 13-ஆம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவுரயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.