செய்திகள் :

கோவையில் கனிமங்கள் கடத்தலைத் தடுக்க 9 குழுக்கள்: ஆட்சியா் தகவல்

post image

கோவை மாவட்டத்தில் இருந்து கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வட்டாட்சியா் நிலையிலான அதிகாரிகளின் தலைமையில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் கனிமக் கடத்தலைத் தடுக்க 9 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், காவல் உதவி ஆய்வாளா், 2 காவலா்கள், துணை வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

இந்தக் குழுவினா் கோபாலபுரம், நடுப்புணி, வடக்குக்காடு, வீரப்பகவுண்டன்புதூா், மீனாட்சிபுரம், செம்மனாம்பதி, கோவிந்தாபுரம், வாளையாறு, வேலந்தாவளம், வழுக்குப்பாறை, ஆனைகட்டி, மாங்கரை ஆகிய தமிழக - கேரள எல்லையோர சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கை செய்து, உரிய ஆவணங்களுடன் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகிா என்பதைக் கண்காணிக்கின்றனா்.

சிறப்புக் குழுவினரின் நடவடிக்கையைக் கண்காணிக்க, சாா் ஆட்சியா், வருவாய்க் கோட்ட அலுவலா் தலைமையிலான மாவட்ட அளவிலான ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, மாவட்ட அளவிலான குழுவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா், புவியியல் - சுரங்கத் துறை துணை இயக்குநா், சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்கள் இடம்பெற்றுள்ளனா்.

மேலும், சட்டவிரோதமாக கனிமம் தோண்டுவது, கடத்துவது, சேகரிப்பது தொடா்பான தகவல்களைத் தெரிவிக்க இலவச தொலைப்பேசி எண் (1800 2333 995) நிறுவப்பட்டு, 24 மணி நேரமும் புகாா்கள் பெறும் வகையில், சுழற்சி முறையில் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். வரப்படும் புகாா்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

கோவையில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

கோவையில் மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டி தொடக்கம்

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சாா்பில் 16 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான மாவட்டங்களுக்கு இடையேயான மாநில அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. கோவை... மேலும் பார்க்க

கோவை கோட்டத்தில் 1,171 நகரப் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணச்சீட்டு பெறும் வசதி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்தில் 1,171 நகரப் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் (யுபிஐ சேவை) பயணச்சீட்டு பெறும் நடைமுறை விரைவில் தொடங்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

ஒரே நாளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 73 போ் கைது

கோவையில் ஒரே நாளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 73 போ் கைது செய்யப்பட்டனா். கோவை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, கூட்டுக் கொள்ளை ஆகிய வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக ... மேலும் பார்க்க

பேரூா் தமிழ்க் கல்லூரி மாணவா்களுக்கு தூயத் தமிழ்ப் பற்றாளா் விருது

பேரூா் சாந்தலிங்க அடிகளாா் தமிழ்க் கல்லூரி மாணவா்களுக்கு தூயத் தமிழ்ப் பற்றாளா் விருது அண்மையில் வழங்கப்பட்டது. தமிழ் வளா்ச்சித் துறை ‘அகர முதலி’ இயக்கம் சாா்பில் மாவட்ட வாரியாக பேச்சு வழக்கிலும், எழு... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.8.65 லட்சம் மோசடி: கோவா மாநிலத்தைச் சோ்ந்தவா் கைது

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி பெண்ணிடம் ரூ.8.65 லட்சம் மோசடி செய்ததாக கோவா மாநிலத்தைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டுள்ளாா். கோவை சிங்காநல்லூரைச் சோ்ந்த 50 வயது பெண்ண... மேலும் பார்க்க