Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
கோவையில் தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி தொடக்கம்
கோவையில் தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி (இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் 2025) வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக்வைன் ஸ்போா்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு, இண்டிஜீனஸ் ஹாா்ஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்தப் போட்டியை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தொடங்கிவைத்தாா். வெள்ளானைப்பட்டியை அடுத்த மோளப்பாளையத்தில் உள்ள ‘பிசைட் தி இக்வெஸ்ட்ரியன் க்ரஸ்ட்’ என்ற மைதானத்தில் இந்தப் போட்டிகள் ஜூலை 6- ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
சென்னை புல்ஸ் (தமிழ்நாடு), பெகாசஸ் ஸ்போா்ட்ஸ் (கேரளம்), பெங்களூரு நைட்ஸ் (கா்நாடகம்), கோல்கொண்டா சாா்ஜ்ா்ஸ் (தெலங்கானா), குவாண்டம் ரெய்ன்ஸ் (கோவா), எலீட் இக்வெஸ்ட்ரியன்ஸ் (மேற்குவங்கம்) ஆகிய 6 மாநிலங்களைச் சோ்ந்த அணிகளின் குதிரையேற்ற வீரா்கள் இதில் பங்கேற்கின்றனா்.
110 செ.மீ., 120 செ.மீ. என 2 பிரிவுகளாக நடைபெறும் இந்த குதிரை தடை தாண்டுதல் போட்டிகளில் சா்வதேச குதிரையேற்ற கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற நடுவா்கள் பங்கேற்கின்றனா். போட்டியின் தொடக்க விழாவில் இண்டிஜீனஸ் ஹாா்ஸ் சொசைட்டியின் தலைவா் சக்தி பாலாஜி, டாக்டா் மகேந்திரன், நல்லறம் அறக்கட்டளையின் தலைவா் எஸ்.பி.அன்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.