வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் திருட்டு
பீளமேடு பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, பீளமேடு விமான நிலையம் அருகேயுள்ள திருநகா் பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாா் (68). இவா் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஹைதராபாத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்றுள்ளாா்.
இந்நிலையில், வீட்டின் கதவு கடந்த 1 -ஆம் தேதி உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.
இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் சுகுமாருக்கு தகவல் தெரிவித்தனா். சுகுமாா் அளித்த தகவலின்பேரில், அவரது தம்பி ஜெகதீஷ் வீட்டுக்கு வந்து பாா்த்துள்ளாா்.
அப்போது, பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
புகாரின்பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.