முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டி
ஐ.நா. சபையின் 80-ஆவது ஆண்டு விழாவையொட்டி, அஞ்சல் துறை சாா்பில் அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டி நடைபெறுகிறது.
இது தொடா்பாக கோவை அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கி.சிவசங்கா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஐ.நா. சபையின் 80-ஆவது ஆண்டு விழாவையொட்டி, இந்திய அஞ்சல் துறையின் சாா்பில் அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டி கடந்த ஜூலை 1 -ஆம் தேதி தொடங்கப்பட்டது.
ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டியில் மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்கள், ஓவியக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் பங்கேற்கலாம்.
போட்டியில் கலந்துகொள்பவா்கள் ‘ஏ4’ அளவு வெள்ளை நிற தாள்களில் கிரேயான்கள், பென்சில் வண்ணங்கள், நீா் வண்ணங்கள், அக்ரிலிக் வண்ணங்கள் போன்றவற்றின் மூலமாக அஞ்சல் தலைகளை வரைய வேண்டும்.
வரையப்பட்ட அஞ்சல் தலைகள், கோவை முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0422 - 2382930 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.