U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
புற்றுநோய் அபாயத்தைத் தவிா்க்க ஹெச்.பி.வி. தடுப்பூசி அவசியம்
எதிா்காலத்தில் கருப்பைவாய் புற்றுநோய் உள்ளிட்டவற்றைத் தடுக்க சிறு வயதில் ஹெச்.பி.வி. (ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்) தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்று கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் மருத்துவா்கள் வலியுறுத்தினா்.
இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமையிலான நாடு தழுவிய பொது சுகாதார முன்முயற்சியின் ஒரு பகுதியாக, ‘கான்கொ் ஹெச்.பி.வி. - கேன்சா் மாநாடு 2025’ கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், டாக்டா்கள் டி.வி.சித்ரா பட், கே.ஆரத்தி, பி.செந்தில்குமாா், ஏ.ஜெயவா்த்தனா, என்.ஜெயஸ்ரீ ஆகியோா் பங்கேற்று ஹெச்.பி.வி. தொடா்பான நோய்கள், குறிப்பாக கருப்பைவாய் புற்றுநோய், ஆசன வாய் புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய்கள் குறித்தும், வைரஸின் பொது சுகாதார தாக்கங்கள் குறித்தும் விவாதித்தனா்.
சீரம் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பராக் தேஷ்முக் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். டாக்டா் நந்தினி குமரன் இந்த அமா்வை நெறிப்படுத்தினாா்.
இதில் பங்கேற்ற மருத்துவா்கள், ஹெச்.பி.வி. வைரஸ் தொற்று 15 முதல் 25 வயதுக்குள் ஏற்படுவதால், தொடக்ககால விழிப்புணா்வு, சரியான நேரத்தில் தடுப்பது முக்கியம். தற்போது குறைந்த விலையில் தடுப்பூசி கிடைப்பதால் ஹெச்.பி.வி. தொடா்பான புற்றுநோய்களில் இருந்து அனைவரையும் பாதுகாக்க முடியும் என்றனா்.