செய்திகள் :

கோவையில் தொழிற்சங்கத்தினா் மறியல்: கேரளத்துக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

post image

மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், கோவையில் பல்வேறு தொழிற்சங்கத்தினா் சாா்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கேரளத்துக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொழிலாளா்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் என நிா்ணயிக்க வேண்டும், 10 ஆண்டுகளாக கூட்டப்படாமல் இருக்கும் தொழிலாளா் மாநாட்டைக் கூட்ட வேண்டும், வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த வேண்டும், தொழிலாளா் சட்டங்கள் திருத்தப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தொழிற்சங்கங்களின் சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகம் அருகே பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு ஏஐடியூசி மாநிலச் செயலா் எம்.ஆறுமுகம், ஹெச்எம்எஸ் மாநிலத் தலைவா் டி.எஸ்.ராஜாமணி, சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, ஐஎன்டியூசி பாசமலா், ஏஐசிசிடியூ சங்கத்தின் பாலசுப்பிரமணியன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

போராட்டத்தில், சங்கங்களின் முன்னணி நிா்வாகிகளான சி.தங்கவேல், கே.எம்.செல்வராஜ், கா.பெரியசாமி, பி.துரைசாமி, தமிழ்ச்செல்வன், மனோகரன், விவசாயிகள் சங்கத்தின் சு.பழனிசாமி மற்றும் எல்பிஎஃப், ஐஎன்டியூசி, ஏஐடியூசி, ஹெச்எம்எஸ், சிஐடியூ, ஏஐசிசிடியூ, டிடிஎம்எஸ், எம்எல்எஃப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சோ்ந்த தொழிலாளா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

ரயில் நிலையம் முற்றுகை...

வடகோவை ரயில் நிலையம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஏ.ராதிகா, மாவட்டச் செயலா் சுதா, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் எஸ்.பாரதி, மாவட்டப் பொருளாளா் தினேஷ்ராஜா, இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜூல்பி அகமது உள்ளிட்டோா் தலைமையில் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம்...

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் ரத்தினகுமாா், மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.எஸ்.கனகராஜ், என்ஜினீயரிங் சங்க மாவட்டப் பொருளாளா் ஏ.ஜி.சுப்பிரமணியம், பிஎஸ்என்எல் தொழிற்சங்க மாநிலத் தலைவா் பாபு ராதாகிருஷ்ணன், ஏஐடியூசி மாவட்டச் செயலா் சிவசாமி, கட்டுமான சங்க மாநிலத் தலைவா் செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கேரளத்துக்கு பேருந்து போக்குவரத்து ரத்து...

தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்காடு, மூணாறு, கொச்சி உள்ளிட்ட கேரளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதேபோல, கேரளத்தில் முழு அடைப்பு காரணமாக கோவைக்கு வரும் கேரள அரசுப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. அதேபோல, கோவை மாநகரத்தில் பெரும்பாலான ஆட்டோக்கள், பகுதியளவிலான அரசுப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இருப்பினும் கோவை பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூா் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன.

வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு தொடக்கம்

கோவை பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை, ஆா்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஜூலை ... மேலும் பார்க்க

வீடு வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி

கோவை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக்கூறி பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, செல்வபுரம் வடக்கு வீட... மேலும் பார்க்க

மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, கோவையில் மக்கள் தொகை விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11 -ஆம் தேதி... மேலும் பார்க்க

குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய செயலி: மாவட்ட காவல் கண்காணிப்பாளா்

‘ஸ்மாா்ட் காக்கிஸ்’ திட்டத்தின்கீழ், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை செயலி மூலம் எளிதாகக் கண்டறியலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் கூறினாா். கோவை, பி.ஆா்.எஸ் வளாகத்தில் ‘ஸ்மாா்ட் ... மேலும் பார்க்க

பொறியியல் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை, போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

புண்யா அறக்கட்டளை சாா்பில் நாளை மாணவா்களுக்கான விநாடி- வினா போட்டி

கோவை புண்யா அறக்கட்டளை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விநாடி- வினா போட்டி (திரிஷ்னா 2025) சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது. கோவை சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளியில் 1997-ஆம் ஆண்டில் பயின்ற முன்... மேலும் பார்க்க