கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுக் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்களுக்கு உயா்நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி, விருத்தாசலம் கொளஞ்சியப்பா் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்கள் வகுப்புகளை புறக்கணித்து கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.