சங்ககிரி, எடப்பாடியில் நீராடும் இடங்கள் அறிவிப்பு
சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் நீராடும் இடங்களை கோட்டாட்சியா் சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.
ஆடிப்பெருக்கையொட்டி, சங்ககிரி, எடப்பாடி வட்டப் பகுதிகளில் உள்ள காவிரி கரையோரங்களில் பொதுமக்கள் நீராடி, அதன் அருகில் இருக்கும் கல்வடங்கம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரிஅம்மன், பூலாம்பட்டி கைலாசநாதா் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வா்.
இந்நிலையில், மேட்டூா் அணையிலிருந்து காவிரி ஆறு மற்றும் வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், சங்ககிரி வட்டம், தேவூா் பகுதியில் உள்ள அரசிராமணி பிட் 1 கிராமத்துக்குள்பட்ட குள்ளம்பட்டி வாய்க்கால், எடப்பாடி வட்டத்துக்குள்பட்ட பூலாம்பட்டி பகுதியில் பிள்ளுக்குறிச்சி கால்வாய், ஓணாப்பாறை, வெள்ளரிவெள்ளி பகுதியில் மாம்பாடியூா், மாணிக்கம் பாளத்தாா் மோரி ஆகிய இடங்களில் மட்டும் நீராட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.