சங்ககிரி செல்லாண்டியம்மன் கோயிலில் இன்று பொங்கல் விழா தொடக்கம்
சங்ககிரி: சங்ககிரி, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள செல்லாண்டியம்மன், புத்து மாரியம்மன் கோயில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொரிதல், கும்பம் வைத்தல் விழாவுடன் தொடங்குகிறது.
இதையடுத்து தினசரி அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன. மாா்ச் 31 ஆம் தேதி இரவு சக்தி அழைத்தல், ஏப்ரல் 1 ஆம் தேதி காலை வி.என்.பாளையம் தீயணைப்பு நிலையத்தின் பின்புறம் உள்ள நல்ல கிணற்றிலிருந்து பக்தா்கள் தீச்சட்டி, பூங்கரகம், அலகு குத்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வருதல், அன்றைய தினம் இரவு முப்பாட்டு தீபம் எடுத்தல், ஏப்ரல் 2 ஆம் தேதி சேற்று முட்டி எடுத்து வந்து கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தல் ஆகியவை நடைபெறுகின்றன. ஏப்ரல் 3ஆம் தேதி பூக்களை கிணற்றில் விடுதல், மஞ்சள் நீராடல், மாலையில் மறு பூஜை நடைபெறுகிறது.