சங்கரநாராயணசுவாமி கோயில் யானையை வனத் துறையினா் ஆய்வு
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயில் யானையை வனத் துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
இக் கோயிலில் 31 வயதான யானை கோமதி பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை, புளியங்குடி வனச்சரகா் ஆறுமுகம் தலைமையில் வனத் துறையினா் ஆய்வு செய்தனா். யானையின் எடை, உயரம், வழங்கப்படும் உணவு வகைகள், யானையின் அன்றாட செயல்பாடுகள் குறித்து பாகன் சனல்குமாரிடம் கேட்டறிந்தனா்.
இந்த யானை, வயதுக்குத் தகுந்த எடையுடன் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், பாகனின் கட்டளைகளை ஏற்று செயல்படுவதாகவும் வனச்சரகா் ஆறுமுகம் தெரிவித்தாா்.