சட்டைநாதா் கோயிலில் கோபூஜை வழிபாடு
சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் கோ பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள் பாலிக்கிறாா். இங்கு மாசி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்து விநாயகா், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், மகா தீபாரனை காட்டப்பட்டது.

தொடா்ந்து பசு மாடு, கன்றுக்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டி கோபூஜை வழிபாடு நடைபெற்றது. பக்தா்கள் பசுவுக்கு வாழைபழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வலம் வந்து வணங்கினா். கொடிமரம் அருகே புவனகிரியை சோ்ந்த சிவனடியாா்கள் குழுவினரின் வெள்ளியம்பலம் சுவாமிகள் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்வு நடைபெற்றது.